ஜே.ஈ.ஈ மெயின் தேர்வுக்கு மாணவர்கள் திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜே.ஈ.ஈ மெயின் தேர்வு குறித்த அறிவிப்பு டிசம்பர் 15ஆம் தேதி வெளியான நிலையில் இந்த தேர்வு ஜனவரி 24 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது. இந்த நிலையில் ஜே.ஈ.ஈ மெயின் தேர்வு அறிவிக்கப்பட்ட தேதிக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஐடி என்ஐடி ஆகியவற்றில் சேர்வதற்கான ஜே.ஈ.ஈ மெயின் தேர்வு தமிழ் உள்பட பல மொழிகளில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஜே.ஈ.ஈ மெயின் தேர்வுக்கான விண்ணப்ப சமர்ப்பிக்கும் பணி தொடங்கி தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல் அமர்வு தேர்வு ஜனவரி மாதத்திலும் இரண்டாவது அமர்வு தேர்வு ஏப்ரல் மாதத்திலும் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த இரண்டு அமர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்கிறார்களோ அதன்படி தர வரிசைப்படி அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் ஜே.ஈ.ஈ மெயின் தேர்வுக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், ஜே.ஈ.ஈ மெயின் தேர்வுக்கு எப்படி தயார் ஆக முடியும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே ஜே.ஈ.ஈ மெயின் தேர்வை ஜனவரி, ஏப்ரலி மாதம் நடத்த கூடாது என மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.