Connect with us

மாணவி ஸ்ரீமதி விவகாரம்: பெற்றோர் தரப்பில் புதிய மனு!!

Capture 48

தமிழகம்

மாணவி ஸ்ரீமதி விவகாரம்: பெற்றோர் தரப்பில் புதிய மனு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்  குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.  அதன் ஒரு பகுதியாக மாணவியின் பிரேத பரிசோதனையில் தங்களது தரப்பில் மருத்துவரை அனுமதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இருப்பினும் உச்ச நீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது.

அதோடு மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான ஆய்வறிக்கையை ஜிப்மர் மருத்துவமனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர். அதன் படி, நேற்றைய தினம் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கையை கேட்டு ஸ்ரீமதியின்  பெற்றோர் தரப்பில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top