Connect with us

தெரு நாய் துரத்தியதால் பைக்கில் சென்ற 11ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு..!!

நாய்கள்

Tamil Nadu

தெரு நாய் துரத்தியதால் பைக்கில் சென்ற 11ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு..!!

பொதுவாக நாம் சாலையோர தெரு நாய்களுக்கு பயப்படுவது வாடிக்கையான ஒன்றாக காணப்படும். ஏனென்றால் அந்த நாய்கள் நாம் பைக்களிலோ அல்லது ஓடும்போது வேகமாக துரத்தும்.

அதற்கு ஒரு சிலர் தைரியமாக நின்று எதிர்கொள்வர். ஒரு சிலரோ அஞ்சி நிலைமை தெரியாமல் வாகனத்தை வேகமாக ஓட்டுவார்கள். இது ஒரு சில நேரங்களில் பெரும் விபத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் நாய் துரத்தி ஒருவர் பைக்கில் இருந்து விழுந்து பஸ் மீது மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக காணப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு பேருந்து ஏறியதில் 11ஆம் வகுப்பு மாணவர் கவின் கிருஷ்ணா என்பவர் உயிரிழந்துள்ளார். நாய் துரத்தியதால் பைக்கில் இருந்து கீழே குதித்தபோது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதில் மாணவர் கவின் கிருஷ்ணா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். மேலும் அந்த இடங்களில் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top