
Tamil Nadu
பள்ளி மோதலில் மாணவன் பலி; பள்ளி நிர்வாகக் குழு ஆய்வு செய்ய உத்தரவு !!
நெல்லை மாவட்டம் அம்பை அருகே பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கொடூர தாக்குதல் நடத்திக்கொண்டத்தில் மாணவர் ஒருவர் இன்றைய தினத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பள்ளி நிர்வாகக் குழு அமைத்து உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக பள்ளிகளில் நடவடிக்கைகள், மாணவர்களின் செயல்பாடுகள் போன்ற ஆய்வு நடத்த அம்மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
