அதிர்ச்சி! பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவன் பலி..!!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே பள்ளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 8-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே குதிரைக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் மாதையன் – தங்கமணி தம்பதியினர். இவர்களுக்கு திவாகர் என்ற மகன் இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் மாணவன் வழக்கம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் வழக்கம் போல் பள்ளியின் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது மாணவன் படிக்கட்டில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே டிரைவர் பிரேக் அடித்ததால் நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளான். அதில் பள்ளி பேருந்தின் சக்கரமானது மாணவனின் தலைமீது ஏறி இறங்கியுள்ளது.

சம்பவ இடத்திலேயே மாணவன் தலை நசுங்கி பலியாகியுள்ளான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதகைக்காக அனுப்பி வைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment