எவ்வளவு சொல்லியும் கேட்காத மாணவர்; படியில் பயணித்து கீழே விழுந்து உயிரிழப்பு!

பொதுவாக நம் தமிழகத்தில் பேருந்துகளில் மாணவர்கள் படியில் பயணம் செய்வதும் பேருந்து செல்லும் போது ஓடிவந்து படியில் ஏறி நிற்பதும் தினம்தோறும் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது.

இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறையினர் சார்பில் அறிவுரைகள் அவ்வபோது வழங்கப்பட்டு வருகின்றன. அதோடு மட்டுமில்லாமல் படியில் பயணம் செய்வதால் ஏற்படும் அபாயம் பற்றியும் நடத்துனர் எச்சரிக்கிறார்கள்.

இவையெல்லாம் தாண்டி மாணவர்கள் தொடர்ந்து படியில் தான் பயணம் செய்கிறார்கள். இதனால் பல நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தின் காரணமாக உயிரிழப்பதாக நடைபெறுகிறது.

அந்த படி யில் தான் பயணம் செய்த மாணவர் தவறுதலாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு பேருந்தின் படியில் நின்று பயணித்த மாணவர் தவறுதலாக கீழே விழுந்து உயிரிழந்தார்.

அரசினர் கலைக் கல்லூரி மாணவர் சதீஷ்குமார் அரசு பேருந்து படியில் பயணித்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் மேற்கு காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment