மீண்டும் சோகம்!! சென்னையில் பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை!!

சென்னையில் பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த நீலாங்கரை பகுதியில் வசித்து வருபவர் மகேஷ். இவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் கவின்குமார் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் மாணவன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற நிலையில் வகுப்பில் தூக்கியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர் ஒருவர் மாணவனை கண்டித்தாக கூறப்படுப்படுகிறது. இது குறித்து மாணவனின் தந்தை மகேஷ்யிடம் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளுக்கு ஜாக்பாட்!! காரைக்கால் துறைமுகத்தில் 4 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா இறக்குமதி!!

இதனால் சில தினங்களாக பள்ளிக்கு செல்லாம் இருந்துள்ளார். இந்த சூழலில் டிச.1-ம் தேதி மாணவன் பள்ளிக்கு வழக்கம்போல் சென்றுள்ளான். அப்போது பள்ளி முதல்வர், உடற்பயிற்சி ஆசிரியர் வெங்கடேசன் ஆகியோர் பள்ளி கழிவறையில் போதைபொருட்கள் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

அதோடு சக மாணவர்கள் முன்னிலையில் கவினை அடித்ததாக தெரிகிறது. இதனாம் மனமுடைந்த மாணவன் நேற்று வீட்டில் யாருல் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த மாணவனின் உறவினர் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கழிவறையை சுத்தம் செய்த தலித் மாணவர்கள்: தலைமையாசிரியர் கைது!!

தகவறிந்து விரைந்து வந்த நீலாங்கரை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தினை களைத்தனர். அதோடு மாணவனின் இறப்பிற்கு காரணமாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேசனைக் கைது செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.