காரைக்காலில் சோகம்!! விஷம் கலந்த குளிர்பானம் குடித்த மாணவன் பலி!!

காரைக்காலில் விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

காரைக்கால் அடுத்த நேரு நகரில் தனியார் பள்ளியில் இருக்கும் 8-ம் வகுப்பு மாணவன் பாலமணிகண்டனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஆண்டு விழாவில் உறவினர்கள் கொடுத்தாக காவலாளி வழங்கிய குளிர்பானம் குடித்த பிறகே உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து பள்ளியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் மணிகண்டன் உடன் படிக்கும் மகளின் தாயார் குளிர்பானத்தை கொடுத்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனிடையே படிப்பில் ஏற்பட்ட போட்டியில் காரணமாக மாணவியின் தாயார் விக்டோரியா விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்தாக சிறுவனின் பெற்றோர் புகார் அளித்தனர். இதனையடுத்து காவல்துறையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவமனையை தாக்கிவிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் காவல்துறைனர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment