அதிர்ச்சி! ஆன்லைனில் விஷம்… கல்லூரி மாணவன் தற்கொலை..!!

செங்கல்பட்டில் கல்லூரி மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் பிரபல தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 21 வயதான கேரள மாநிலத்தைச் சேர்ந்த நிகில் என்ற மாணவன் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு ஆன்லைனில் விஷம் ஆடர் செய்து மாணவன் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தனது நண்பருக்கு இதனை தெரிவித்து உள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிகில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தர்

மேலும், தற்கொலை செய்து கொள்வதற்காக மாணவன் நிகில் ஆன்லைனில் விஷம் வாங்கியது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment