Connect with us

அதிர்ச்சி சம்பவம்: நீட் தேர்வு தோல்வியால் தூக்கில் தொங்கிய மாணவி!!

தற்கொலை

தமிழகம்

அதிர்ச்சி சம்பவம்: நீட் தேர்வு தோல்வியால் தூக்கில் தொங்கிய மாணவி!!

நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் நேற்று இரவு நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த மாணவி லக்‌ஷனா ஸ்வேதா என்பவர் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்வேதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மகளை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

அப்போது மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top