News
அரியர் மாணவர்களின் அரசனே! முதல்வருக்கு கட்-அவுட் வைத்து கொண்டாடும் மாணவர்கள்!

கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர மற்ற அனைத்து மாணவர்களும் பாஸ் என நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்தார்
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு உட்பட பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கல்லூரி செமஸ்டர் தேர்வும் ரத்து என்றும் அனைத்து மாணவர்களும் பாஸ் என்றும் முதல்வர் நேற்று அறிவித்திருந்தார்
இருப்பினும் யுஜிசி அறிவுரைப்படி இறுதி ஆண்டு செமஸ்டர் மட்டும் மாணவர்கள் எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவித்த முதல்வருக்கு மாணவர்கள் போஸ்டர் அடித்தும் கட்அவுட் வைத்தும் நன்றி தெரிவித்து வருகின்றனர்
’அரியர் மாணவர்களின் அரசனே’ என்றும் கூறி அதில் ’எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்ற திருக்குறளையும் பதிவு செய்து எடப்பாடி அவர்களை நீர் வாழ்க வாழ்க என்று அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இங்கனம் அரியர் மாணவர்கள் என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது
தேர்வு எழுத பதிவு செய்திருந்தால் அரியர் வைத்தவர்கள் பாஸ் என்ற அறிவிப்புக்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் மற்றும் கட் அவுட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
