கல்லூரிக்குள்ளே மாணவி கொடூர கொலை! பெங்களூரில் நடந்த விபரீதம்!

பெங்களூரில் பிரிசிடன்சி பல்கலை கலகம் செயல் பட்டு வருகிறது, இங்கு லயஸ்மிதா என்ற மாணவி பி.டெக் படித்து வருகிறார். இந்நிலையில் மாணவியை பார்ப்பதற்காக அவரது கல்லூரிக்கு நேற்று மதியம் பவன்கல்யாண் என்ற வாலிபர் வந்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு திடீரென பவன் கல்யாண் தன்னிடம் உள்ள சிறிய கத்தியை வைத்து மாணவியை சரமாறியாக குத்தியுள்ளார். பின்பு அதே இடத்தில் தன்னையும் குத்தியுள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் உடனே கல்லூரி நிர்வாகத்திடம் தகவலை தெரிவித்துள்ளனர். பின்பு கல்லூரியின் காவலாளிகள் இருவரையும் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் பவன் கல்யாண் உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு விசாரானை செய்து வருகிறது . முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபணும் அந்த மாணவியும் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் இருவருக்கும் பல வருட பாழாக்கம் உள்ளது தெரிய வந்துள்ளது.

நடிகர் விஜய்யை சீண்டி பார்க்கும் பிரபல இசையமைப்பாளர்! வைரல் பதிவு!

ஆனால் இருவரும் காதலித்து வந்துள்ளார்களா என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில் கல்லூரி வளாகத்தில் பெண் மாணவியை ஒரு மாணவன் கொலை செய்த்து பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.