வகுப்பறைக்குள் செல்போன் வைத்திருக்க கூடாது என கண்டித்த ஆசிரியரை மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி அமராவதிபுதூரில் அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் ஆசிரியர் ராஜா என்பவரை மாணவர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.
வகுப்பறையில் செல்போனுடன் இருந்ததை கண்டித்ததால் ஆசிரியர் ராஜாவை மாணவர் கத்தியால் குத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாணவர்களை நல்வழிப்படுத்த அவர்களை கண்டிக்கவும், தண்டிக்கவும் ஆசிரியர்களுக்கு உரிமை உள்ளது. இந்நிலையில் வகுப்பறைக்குள் செல்போன் பயன்படுத்தாதே என சொன்னதற்காக மாணவன் ஆசிரியரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.