Connect with us

அமலாக்கத்துறையை கண்டித்து போராட்டம்! குண்டுகட்டாக காங்கிரஸ் கட்சியினர் கைது!!

காங்கிரஸ்

News

அமலாக்கத்துறையை கண்டித்து போராட்டம்! குண்டுகட்டாக காங்கிரஸ் கட்சியினர் கைது!!

நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு தினங்களாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர். நேற்று மட்டும் சுமார் 10 மணி நேரத்திற்கு விசாரணை நடத்தியது அமலாக்கத்துறை.

இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராடிக் கொண்டு வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

அமலாக்கத் துறையை கண்டித்து போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சிக்கு உரிமை உள்ளது என்று அவர் கூறினார். ஹெரால்டு வழக்கில் என்ன தவறு நடந்தது, யார் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தான் கேட்கிறோம் என்று சிதம்பரம் கூறினார்.

கடந்த 5 ஆண்டுகளில் பாஜக தலைவர்கள் யார் மீதாவது அமலாக்க துறை வழக்கு பதிந்து உள்ளதா? என சிதம்பரம் கேள்வி கேட்டுள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் இதுவரை அமலாக்கத் துறை வழக்கு பதிந்து உள்ளதா? என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார். அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்துவதை கண்டித்து தான் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் பா சிதம்பரம் கூறினார்..

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top