கொட்டும் மழையில் குற்றசாட்டு! பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து போராட்டம்!!

பெட்ரோல்

இந்தியாவில் தற்போது மிகப்பெரிய பெரும் பிரச்சனையாக காணப்படுவது பெட்ரோல் டீசலின் விலை உயர்வாகும். தமிழகத்தில் சில நாட்களாகவே பெட்ரோலின் விலை 100 ரூபாயை தாண்டியது.கம்யூனிஸ்ட்

அதோடு மட்டுமல்லாமல் தற்போது டீசலின் விலையும் தமிழகத்தில்  100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யபடுகிறது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து காணப்படுகிறது.

இதற்காக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகத்தில் போராட்டம் நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராசிபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சமையல் சிலிண்டர்,  இரு சக்கர வாகனத்துக்கு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொட்டும் மழை என்று கூட பார்க்காமல் தொடர் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டுவருகின்றனர். மோடி அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கையால் தான் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றசாட்டு வைத்துள்ளனர். கொட்டும் மழை என்று பாராமல் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றச்சாட்டு வைத்து பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து போராடி வருகின்றனர்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print