Connect with us

தேங்காய் விலை வீழ்ச்சி; தேங்காயை ரோட்டில் உடைத்து போராட்டம்!!

coconut

Tamil Nadu

தேங்காய் விலை வீழ்ச்சி; தேங்காயை ரோட்டில் உடைத்து போராட்டம்!!

பொதுவாக விவசாயம் என்பது மிகவும் கடினமான ஒன்றாக காணப்படும். ஏனென்றால் அவர்கள் பல நாட்களாக இந்த விதையை வளர்த்து அதைக் கொண்டுவரும் போது ஓரிரு நாட்கள் விற்பனையாகாவிட்டால் காய்கறிகள் உள்ளிட்டவைகள் அழுகிப்போகும் நிலை காணப்படும்.

இதனால் அவர்கள் வேறு வழியில்லாமல் மலிவான விலைக்கு விற்பனை செய்வர். அதுவும் குறிப்பாக மழைக்காலம் என்றாலே அனைத்து விதமான காய்கறிகள் சீக்கிரம் அழுகும் நிலைமை காணப்படும்.

அவற்றுள் ஒன்று தான் தேங்காய். ஏனென்றால் தேங்காய் மழை காலத்தில் மூன்று நாட்கள் கூட தாங்காது. வெயில் காலத்திலும் கூட வெடித்து விடும் நிலை தேங்காய்வில் காணப்படும். இதனால் தேங்காயின் விலை சற்று குறைவாகவே காணப்படும்.

இது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் விவசாயிகளுக்கு பெரும் இன்னலாக காணப்படுகிறது. ஏனென்றால் தென்னை மரத்திற்கு அதிக அளவு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அவ்வாறு கிடைக்கும் தேங்காய் சந்தையில் மலிவு விலையில் கிடைத்தால் அவர்கள் மீண்டும் விவசாயம் செய்வதற்கு கூட லாபம் கிடைக்காது.

இதனால் விவசாயிகள் அதிருப்தியில் காணப்படுவர். அதிருப்தியின் உச்சத்தில் விவசாயிகள் தேங்காய்களை உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே நடைபெற்றுள்ளது.

அதன்படி திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையத்தில் தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று தேங்காய் உடைத்து போராட்டம் நடைபெற்றது. தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top