Connect with us

நேற்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அவமதிப்பு; இன்று ரிசர்வ் வங்கி முன்பு போராட்டம்!

rbi reuters

செய்திகள்

நேற்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அவமதிப்பு; இன்று ரிசர்வ் வங்கி முன்பு போராட்டம்!

நேற்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அவமதிப்பு; இன்று ரிசர்வ் வங்கி முன்பு போராட்டம்!

நேற்றைய தினம் இந்தியாவில் 73 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் கோலாகலமாக அலங்கார வாகன ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் ஆளுநர் தேசிய கொடியேற்றினார். நேற்றைய தினம் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக பலரும் கூறினர். ஏனென்றால் ரிசர்வ் வங்கி உறுப்பினர்கள் தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க மாட்டோம் என்று கூறினார்கள்.

விழாவின் நிறைவின்போது பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவர்கள் எழுந்து நிற்க மறுத்தனர்.  இந்த நிலையில் இன்றைய தினம் ரிசர்வ் வங்கி முன்பு போராட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட்டுள்ளனர். குடியரசு தின விழாவில் தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் ரிசர்வ் வங்கிக்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top