Connect with us

பலத்த காற்று! குறிப்பாக இங்கு செல்ல வேண்டாம்!! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!!

செய்திகள்

பலத்த காற்று! குறிப்பாக இங்கு செல்ல வேண்டாம்!! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!!

a74d1688fa49373d8a4cd023a948079d

தமிழகத்தில் தற்போது காற்றுக் காலம் என்பதால் தரைக் காற்று அதிகமாக வீசுகிறது.  இதனால் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து விட்டது. இவை மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் மீனவர்களுக்கு பெரும் சோகத்தை விளைவிக்கிறது. காரணம் என்னவென்றால் காற்று அதிகமாக வீசினால் அவர்களால் கடலுக்கு செல்ல முடியாத நிலை காணப்படும்.b5120e5c9ed3e71165102bccff93da10

மேலும் அவர்கள் 365 நாட்களில் ஏறக்குறைய நூறு நாட்களுக்கும் குறைவாகவே கடலுக்குள் சென்று மீன் பிடிப்பவர்கள் மீன்பிடித் தொழிலையே வாழ்வாதாரமாக நம்பியும் காணப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது அவர்களுக்கு மேலும் சோகமளிக்கும் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுவித்துள்ளது. அந்தப்படி பலத்த காற்று வீசி வாய்ப்புள்ளதால் மீனவர்களின் தென்மேற்கு, தென்கிழக்கு மற்றும் இலங்கை பகுதிகளில் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளது. மேலும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை அரபிக்கடலில் தென் மேற்கு, மத்திய மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் இந்த காற்றானது மணிக்கு 50 கிலோ மீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதாலும் மீனவர்களுக்கு அடுத்த நான்கு நாட்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top