பிக் பாஸ் சீசன் 5 முடிந்த சோகத்தில் இருந்த ரசிகர்களை ஒட்டுமொத்தமாக இழுத்து கட்டியுள்ளது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி. இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5 ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கமாக இழுத்துக்கொண்டு உள்ளது.
ஏனென்றால் இங்கு தினந்தோறும் சுவாரசியமான சண்டைகள், காரசாரமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே குதுகலமான கொண்டாட்டங்களும் உள்ளே அரங்கேறிக் கொண்டுதான் வருகிறது.
அந்த வரிசையில் பிக்பாஸ் அல்டிமேட் அங்குள்ள ஹவுஸ் மெட்டுகளுக்கு விருது அளிக்கும் விழா ஒன்றினை ஏற்படுத்தி உள்ளது. இதில் தொகுப்பாளினியாக செய்தி வாசிப்பாளர் அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் வரிசையாக காமெடியான பட்டப் பெயர்கள் கொண்ட போர்டுகளை அங்குள்ள ஹவுஸ் ஹவுஸ் மெட்டுகளுக்கு கொடுத்துக் கொண்டு வருகிறார். அந்தவகையில் இந்த வீட்டின் வலிமையான நபர் என்ற போர்டு உள்ள அவார்டை பாலாஜி முருகதாசுக்கு சினேகன் கழுத்தில் மாட்டிவிட்டார்.
அப்போது பேசிய பாலாஜி முருகதாஸ் இந்த வலிமையான நபர் என்ற போர்டு எனக்கு அவார்ட் ஆக இல்லாமல் பாரமாக உள்ளது என்று நகைச்சுவையாக கூறினார். ஏனென்றால் வலிமையான நபர் என்று கூறி பலரும் ஒதுக்குவதாக அவர் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
https://youtu.be/Y7wNPlz2xx0