ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சட்டப்பேரவையில் பல காரசார விவாதங்கள் நடைபெற்றது. அதிலும் குறிப்பாக கச்சத்தீவை பற்றிய காரசார விவாதம் இன்று வரையும் யூடியூப் போன்ற சமூக வலைதள பக்கங்களில் அதிக அளவு பார்க்கலாம்.
ஏனென்றால் அவர் தைரியமாக கச்சத்தீவை விவகாரத்தில் திமுக செய்ததை பேசியிருந்தார். இந்த நிலையில் கச்சத்தீவு மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இலங்கை இடம் இருந்து கச்சத்தீவை மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் கூறியுள்ளார். இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சீன உலவு கப்பலை இந்தியா தீவிரமாக கண்காணித்துக் கொண்டு வருகிறது என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது; தக்க நேரத்தில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முரளிதரன் கூறியுள்ளார். ஏற்கனவே சீன அரசு இலங்கையின் ஒரு துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.