News
அனைத்து அமைச்சர்களுக்கும் எதிராக வலுவான வேட்பாளர்கள்: முக ஸ்டாலின்
பொதுவாக தேர்தலில் அரசியல் நாகரீகம் கருதி முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக வலுவான வேட்பாளர்களை நிறுத்த மாட்டார்கள். ஆனால் இந்த நாகரிகம் எம்ஜிஆர் கருணாநிதியோடு முடிந்துவிட்டது
தற்போது முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் எதிராக வலுவான போட்டியாளர்களை நிறுத்தும் டிரெண்ட் வந்துள்ளது
இந்த நிலையில் தற்போது இருக்கும் அதிமுக அமைச்சர்கள் மீண்டும் போட்டியிட்டால் அவர்களை எதிர்த்து திமுகவிலிருந்து வலுவான போட்டியாளர்களை போட்டியிட வைக்க முக ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது
தற்போது அமைச்சர் பதவியில் இருக்கும் ஒருவர் கூட வரும் தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என்று திமுக திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக தீவிர செயல்பாடுகள் இதற்கு முடிவு செய்து இருப்பதாகவும் தெரிகிறது
