நாடாளுமன்ற தேர்தல்! 40 தொகுதிகளில் வலுவான கூட்டணி – முதல்வர் ஸ்டாலின்!!

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்றைய தினத்தில் மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைப்பு ரீதியாக 71 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டு வழக்கு – உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி!!

அதில் 29 மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியதாக தெரிகிறது. இந்நிலையில் அப்போது பேசிய முதல்வர் கடந்த முறை நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக 39 இடங்களை கைப்பற்றியதாக கூறினார்.

ஆனால் வருகின்ற 2023 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என தெரிவித்தார். இதற்கான கட்டமைப்புகளை தற்போது இருந்தே தொடங்க வேண்டும் என தமிழக முதல்வர் கூறினார்.

ஆன்லைன் ரம்மி! ஆளுநர் ஒப்புதலுக்கு கோரிக்கை – அமைச்சர் ரகுபதி!

தேர்தலின் போது நன்கு பணியாற்றக்கூடிய பூத் ஏஜண்டுகளை நியமிக்க வேண்டும் என தெரிவித்தனர். அதே போல் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் சரியாக கண்காணிக்கப்படுகிறதா? என்பதை குறித்து மாவட்ட செயலாளர்கள் கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.