40 டூ 50 கி.மீ வேகத்தில் சூறாவளி! 4 நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் நிகழ்கிறது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை கொட்டி தீர்த்தது. அதோடு மட்டுமல்லாமல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குமரிக்கடலில் நிலவுகிறது.வானிலை மையம்

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுவாக மழைக்காலம் என்றால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுவது வழக்கமாக காணப்படும்.இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்படும். மீனவர்களால் கடலுக்கு செல்ல முடியாத அவலமான நிலை உருவாகும், கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும்.

அதே போல் நாளை, நாளை மறுநாள் அரபிக்கடலின் தென்கிழக்கு, கேரள கடலோர பகுதிகள், லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நவம்பர் 5 ஆறில் அரபிக்கடலில் தென்கிழக்குப் பகுதி, கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளி வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை வேகத்தில் சூறாவளி வீசும் என்பதால் அடுத்த நான்கு நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment