Connect with us

தெலுங்கு திரையுலகின் வேலை நிறுத்த போராட்டம்! காரணம் தமிழ் ஹீரோக்கள் தானா?

rajinikanth ajith vijay

பொழுதுபோக்கு

தெலுங்கு திரையுலகின் வேலை நிறுத்த போராட்டம்! காரணம் தமிழ் ஹீரோக்கள் தானா?

தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களின் படங்கள் அனைத்தும் ஐதராபாத்தில் தான் பெரும்பாலும் படமாக்கப்படுவது வழக்கம், தமிழகத்தில் சூட்டின் நடத்துவதை விட அங்கு நடத்துவதால் பொருட் செலவு குறையும் என்பதே முழு காரணம்.

rajinii ti

இந்த நிலையில் தற்ப்பொழுது தெலுங்கு திரையுலகம் திடீரென வேலைநிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது. கொரோனாவிற்கு பிறகு தெலுங்கு திரையுலகின் தயாரிப்பாளர்கள் நிலை மிக மோசமாக உள்ளதாகவும் தயாரிப்பாளர்கள் நேரிடும் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்துவது அவசியமாகியுள்ளது.

Dil Raju next with Vamsi and Vijay 1 1

அதனால் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளை நிறுத்தி ஹீரோக்களின் சம்பளங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என தெலுங்கு திரையுலகின் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இந்த வேலை நிறுத்தம் உறுதியானால் ரஜினியின் ’ஜெயிலர், விஜய்யின் ’வாரிசு’, அஜித்தின் ‘ஏகே 61’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு தள்ளிப் போக வாய்ப்பு உள்ளது.

மேலும் இந்த வேலை நிறுத்தத்திற்கு தமிழ் ஹீரோக்கள் காரணம் எனவும் சில தெலுங்கு தயாரிப்பாளர்களின் மத்தியில் கூறப்படுகிறது, இந்நிலையில் முன்னணி நடிகர்களான விஜய் ,சூர்யா ,சிவகார்த்திகேயன் ,தனுஷ் ஆகியோரின் படங்களை தற்போழுது தெலுங்கு தயாரிப்பாளர்கள் தான் தயாரித்து வருகின்றனர்.

5221b67eb49d51b5570d341f5e540328 original

இந்த தெலுங்கு தயாரிப்பாளர்களிடம் தமிழ் ஹீரோக்கள் வாங்கும் சம்பளம் படத்துக்கு படம் அதிகரித்துள்ளது. மேலும் தெலுங்கு ஹீரோக்களை விட தமிழ் ஹீரோக்கள் சம்பளம் பல மடங்கு அதிகமாக உள்ளதே ஒரு காரணம்.

நாளை வெளியாகும் தி லெஜண்ட் படத்திற்கு இப்படியொரு அதிஷ்டமா? முதல் காட்சி எப்போ தெரியுமா?

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top