மே 16ஆம் தேதி முதல் 21ம் தேதி வரை வேலைநிறுத்தம்.!!!: பனியன் நிறுவனங்கள் அறிவிப்பு;

கடந்த சில நாட்களாக பஞ்சு மற்றும் நூல்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் திருப்பூரில் நெசவுத் தொழிலானது வெகுவாக பாதிக்க பட்டது. இந்த நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்து இந்த மாதம் 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை பனியன் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.

அதன்படி திருப்பூர் நூல் விலை உயர்வை கண்டித்து மே 16ஆம் தேதி முதல் 21ம் தேதி வரை பனியன் நிறுவனங்கள் பொது வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. அனைத்து தொழில் கூட்டமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நடத்திய அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தத்தில் பனியன் நிறுவனங்கள் மட்டும் அல்லாது ஜாப் வொர்க் நிறுவனங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள நிறுவனங்களின் தேவைக்குப் போக மீதமிருக்கும் பஞ்சு நூலை மட்டும் தான் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பஞ்சு மற்றும் நூலை அத்தியாவசிய தேவை பட்டியலுக்கு கொண்டு வந்து பதுக்கலை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் நூல் விலை 30 ரூபாய் உயர்ந்த நிலையில் தற்போது 40 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment