Connect with us

இனி தொழிற்சாலைகளில் தேயிலைத் தூளில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை.!!

tea industry scaled

தமிழகம்

இனி தொழிற்சாலைகளில் தேயிலைத் தூளில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை.!!

எங்கு பார்த்தாலும் கலப்படம் என்பது போல் அனைத்து துறையிலும் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக உணவுப் பொருட்களில் கலப்படமானது ஆங்காங்கே அதிக அளவு நடைபெறுகிறது.

இந்த நிலையில் இனி தொழிற்சாலையில் தேயிலைத் தூளில் கலப்படம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் தொழிற்சாலைகளில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது புதிதாக பொறுப்பேற்றுள்ள தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் இன்றைய தினம் நீலகிரியில் சிறு, குறு நில தேயிலை உற்பத்தி விவசாயிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏனென்றால் அவர்கள் ஒரு கிலோ பசுங்தேயிலைக்கு குறைந்தபட்ச உற்பத்தி விலையாக rs.30 நிர்ணயிக்க கோரிக்கை வைத்து அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் சாலைகளில் ஒன்றாக கூடி கருப்பு துணியினை சட்டையில் குத்திக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top