Connect with us

நாளை போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை!!!

buses 1200

தமிழகம்

நாளை போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை!!!

நாளைய தினத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் கட்டாயம் வேலைக்கு வர வேண்டுமென தமிழக போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்ததின் 6-ம் கட்ட நாளை நடைபெறும் என கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் சில தொழில் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என அரசு போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதோடு நாளைய தினத்தில் பணியாளர்களுக்கு எந்தவித விடுமுறையும் அளிக்கப்படாது என கூறியுள்ளது.

நாளைய தினத்தில் பணிக்கு வராமல் போராட்டத்தில் கலந்து கொண்டால் அன்றைய தினத்திற்கான சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. நாளை பணிக்கு வராத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், போராட்டம் நடத்த தூண்டுபவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top