எச்சரிக்கை: தனியார் பள்ளிகள் நாளை விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை..!!

இன்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பெரும் கலவரம் ஏற்பட்டது. அதிலும் கலவரக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி எரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏனென்றால் சின்ன சேலத்தில் சக்தி என்ற தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் கடந்து இரண்டு நாட்களுக்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்தது.

ஆயினும் அந்த தகவலின் உண்மை தன்மை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று பலரும் போராடிக் கொண்டு வருகின்றனர். மேலும் இன்றைய தினம் அந்த பள்ளியினை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர்.

மேலும் அங்குள்ள வாகனங்கள் அனைத்திலும் தீயை வைத்து எரித்தனர். இதனால் தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என்று சங்கத்தின் தலைவர் அறிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் இயங்காது என சங்கத்தின் தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ, நர்சரி பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் இவ்வாறு அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் தனியார் பள்ளியில் மிகுந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு உள்ள நிலையில் விடுமுறை அளித்தால் தனியார் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிகுலேஷன் இயக்குநரகம் கூறியுள்ளது. விதிகளை மீறி தனியார் பள்ளிகள் விடுமுறை அளிக்க கூடாது என்று அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

தனியார் பள்ளிகள் இயங்காது என எவ்வித அனுமதியும் பெறவில்லை என்று மெட்ரிகுலேஷன் இயக்குனராகம் கூறியுள்ளது. தனியார் பள்ளிகள் மூடுவதாக இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை என்றும் கூறியுள்ளது. முன் அனுமதி பெறாமல் விடுமுறை அளித்தால் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment