Connect with us

இன்று மாலை 6 மணிக்கு மேல் அனுமதி இல்லை : தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..

202202021628524795 Tamil News Tamil News Urban local body election How much spend money SECVPF 1

தமிழகம்

இன்று மாலை 6 மணிக்கு மேல் அனுமதி இல்லை : தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..

இன்று மாலை 6 மணிக்கு மேல் அனுமதி இல்லை : தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19- ஆம் தேதி தொடங்க இருப்பதால் அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வாக்குச்சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் 12,738 பதவிகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் நடைபெற இருப்பதால் இதற்கான பிரச்சாரங்கள் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர்கள் அல்லாத, வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள், கட்சித் தொண்டர்கள், தனி நபர்கள் என அனைவரும் இன்று மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் அந்தந்த உள்ளாட்சி பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், உள்ளாட்சி பகுதியில் இருந்து வெளியேறாதவர்கள் மீது மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தும் விதிகள்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top