ஒரு பைசா வாங்கினாலும் கடும் நடவடிக்கை: அமைச்சர் சக்கரபாணி அதிரடி..
நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து ஒரு பைசா வாங்கினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி எச்சரித்துள்ளார்.
அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், மூட்டைக்கு 30 ரூபாய் லஞ்சம் வாங்குவது குறித்து வெளியான செய்தியை சுட்டிக்காட்டி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னை தொடர்பு கொண்டு தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
விவசாயிகளிடமிருந்து ஒரு பைசா கூட பெறக்கூடாது என்ற நோக்கத்திற்காகத்தான் ஆண்டொன்றுக்கு அரசுக்கு ரூ.83 கோடி கூடுதல் செலவாகும், நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தி தரப்படுகிறது என கூறினார்.
ஆனாலும் மூட்டைக்கு 30 ரூபாய் பெறப்படுகிறது என்கிற புகார் வருகிறது என்றால் தனக்கு வேதனையாக இருக்கிறது என கூறிய அமைச்சர் சக்கரபாணி இனி யாரேனும் இதுபோன்ற செயலில் ஈடுப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
