வலுப்பெறுகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..! அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும்;

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் தெற்கு வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நிலவிக் கொண்டு வருகிறது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு மஞ்சள் அலார்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு கிழக்கே தெற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுப்பெறுவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெறுகிறது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்பகுதியை வந்து சேரும் என்றும் கணித்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இலங்கை கடற்பகுதியில் இருந்து நகர்ந்து தமிழக கடல் பகுதிக்கு அருகே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment