வலுபெறும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

பொதுவாக மழைக்காலம் தொடங்கினால் மீனவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் அவர்களால் கடலுக்கு சென்று மீன் பிடிக்க முடியாத அளவுக்கு கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும்.மீனவர்

இதனால் மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் மூலம் பல்வேறு எச்சரிக்கை விடுக்கப்படும். அதன் தொடர்ச்சியாக தற்போது மீனவர்களுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று கூறியுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவடைகிறது என்றும் கூறியுள்ளது. வங்க கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறுகிறது.

அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மாறும் என்றும் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஏற்கனவே இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சூறாவளியாக மாறாது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment