தற்போது தனது நடிப்பாலும் தனது திறமையாலும் தனது விடாமுயற்சியாலும் இன்று மக்களிடையே ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் நடிகர் அஜித்குமார். மேலும் இவர் தல என்றும் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். மேலும் இவரின் 50வது படமான மங்காத்தா திரைப்படம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இதனை போனிகபூர் தயாரித்து வருகிறார். மேலும் இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
மேலும் இந்த திரைப்படத்தில் அப்டேட்கள் எதுவும் இல்லாமல் சில மாதங்களாக நீடித்ததால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு வலிமை படத்தில் ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு உற்சாகமான தகவலை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.
அதன்படி வலிமை திரைப்படமானது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்ய நாட்டில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அஜீத் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.