என்னது..! மளிகை சாமான் வாங்கினால் வலிமை டிக்கெட் ஃப்ரீயா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடித்த வலிமை திரைப்படமானது நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஹுமா குரேஷி கதாநாயகியாகவும் கார்த்திகேயா உள்ளிட மற்றும் பலபேர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படமானது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற பல மொழிகளில் உலகெங்கிலும் 4000 திரையரங்குகளில் ஒரே நேரத்தில் படம் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் வலிமை படத்தின் டிக்கெட்டுகளை பதிவு செய்ய ரசிகர்களிடம் ஆர்வம் காட்டப்படுவதோடு படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து கொண்டுதான் வருகிறது.
அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள காகிதபட்டறை பகுதியில் மாநில கூட்டுறவு பல்பொருள் அங்காடி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடியில் மளிகைப்பொருள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வலிமை படத்தின் டிக்கெட் இலவசம் என அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அதில் 2999 ரூபாய்க்கு மேல் மளிகைப் பொருள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வலிமை படத்துக்கான இலவச டிக்கெட் மற்றும் பாப்கார்ன், கூல்டிரிங்ஸ் அடங்கிய 500 ரூபாய் தொகுப்பு இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையானது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
