தல அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தின் பாடல் இன்று இரவு வெளியாக இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. போனிகபூர் தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று இரவு வலிமை படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது
இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் இணையதளங்களில் அதனை கொண்டாடி வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ரஷ்யா இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது