வலிமை ரிலீஸ்: விஜய்க்கு நேர் எதிரான முடிவை எடுத்த அஜித்!

764ab8f414677726cf98cbfa2d4c7de7

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியானால், அதனால் அதிக கூட்டம் திரையரங்குகளில் கூடும் என்றும் அதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர் 

ஆனாலும் தன்னுடைய திரைப்படம் வெளியாக வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளார் என்பது தெரிகிறது. இந்த நிலையில் விஜய்க்கு நேர் எதிரான முடிவை எடுத்துள்ளார் அஜித். அவர் நடித்துவரும் வலிமை திரைப்படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் முடிவடையும் வரை இந்த படத்தை வெளியிட வேண்டாம் என தயாரிப்பாளருக்கு அஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது

34efc711e3278d40b0d7a2044637418c

மேலும் வலிமை படம் தாமதமாக ரிலீஸ் ஆவதால் ஏற்படும் நஷ்டம் முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாக அஜித் தயாரிப்பு தரப்பிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தனது படத்தின் வசூல் மற்றும் லாபத்தை விட தனது ரசிகர்களின் பாதுகாப்பே தனக்கு முக்கியம் என்றும் படம் எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்றும், ரசிகர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதே அஜித்தின் எண்ணம் என்றும் கூறப்படுகிறது 

அஜித் விஜய் மற்றும் ஆகிய இருவரும் நேர் எதிரான முடிவுகளை எடுத்துள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.