கேரளாவில் பச்சிளம் குழந்தையின் உடலை கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக கேரளா மாநிலம் முழுவதும் தெரு நாய்களின் அச்சுறுத்தல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பச்சிளம் குழந்தையின் உடலை தெருநாய்கள் கடித்து கொண்டிருந்ததாக தெரிகிறது.
திமுகவில் பரபரப்பு!! விபத்தில் சிக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நாய்களை விரட்டி அடித்தனர். பின்னர் அப்பகுதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி அப்பகுதியில் இருக்கும் மருத்துவ மனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கரூரில் அதிர்ச்சி! மூதாட்டி மீது விழுந்த கட்டிடம்..!!!
மேலும், பச்சிளம் குழந்தை எவ்வாறு இறந்தது? குழந்தையை வீசி சென்றது யார்? போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.