காட்டாற்று வெள்ளத்தில் அசையாமல் நின்ற ஓலை கொட்டகை…. சிவன் தான் காரணமா? பரவசத்தில் மக்கள்……

சமீபகாலமாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. ஆங்காங்கே பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் வந்துள்ளது. பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மக்கள் வாழ்விடங்களை இழந்து தவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் வேலூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. யாரும் நம்ப முடியாத அந்த சம்பவத்தால் மக்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர். அதாவது தொடர் கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா வழியே பாயும் பாலாற்றில் வரலாறு காணாத அளவிற்கு சுமார் 80 ஆயிரம் கன அடிக்கும் மேலாக வெள்ளம் ஏற்பட்டது.

பள்ளிகொண்டா பாலாறு பாலத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் பாலாற்றின் நடுவில் தென்னை ஓலையில் கட்டப்பட்ட ஒரு சிறிய சிவன் கோவில் ஒன்று உள்ளது. கடந்த ஆறு ஆண்டுக்கு முன்பு அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் மூலம் சிவலிங்கம் ஒன்றை கண்டெடுத்த மக்கள் அந்த இடத்திலேயே ஓலை குடிசை அமைத்து அதில் அந்த சிவலிங்கத்தை வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் பாலாற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் காரணமாக கரையோரம் இருந்த சிமெண்ட் சீட் வீடுகள், மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பல இடங்களில் தரைப்பாலங்களும் அடித்து செல்லபட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஆனால் இப்படிப்பட்ட கடுமையான சூழலிலும் பாலாற்றின் நடுவே ஓலைக் கொட்டகையால் அமைக்கப்பட்ட சிவன் கோவிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லையாம். பாலாற்று வெள்ளத்தின் நடுவே நங்கூரம் பாய்ச்சியது போல் கொஞ்சமும் அசையாமல் நிலைத்து நின்ற கோவிலை கண்டு மக்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.

அவ்வளவு வேகமாக வெள்ளம் பாய்ந்தோடிய போதும் வெறும் ஓலையால் கட்டப்பட்ட சிவன் கோயில் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் இருப்பதை கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்து வருகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment