கால்வாயில் தண்ணீரை திறக்க கோரி வாய்ப்பூட்டு போட்டு விவசாயிகள் வினோத போராட்டம்

58 கால்வாயில் தண்ணீரை திறக்க வலியுறுத்தி வாய்ப்பூட்டு போட்டுக் கொண்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பரபரப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் வட்டாச்சியர் கருப்பையா தலைமையில் இன்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 58 கிராம பாசன கால்வாய் சங்க விவசாயிகள்., 58 கிராம கால்வாயில் நீரை திறக்க வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் முதல் முதல்வர் வரை கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும், இராமநாதபுரம், மேலூர் பகுதி விவசாயிகள் கூட உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் நீரை திறக்க ஆட்சபனை தெரிவிக்காமல் அனுமதி அளித்துள்ளதாகவும்,

அதிகாரிகள் தண்ணீரை திறக்க கால தாமத படுத்தி வருவதாக குற்றம் சாட்டி வாயில் பச்சை துண்டால் வாய்ப்பூட்டு போட்டுக் கொண்டு கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைக் கண்ட உசிலம்பட்டி வட்டாச்சியர் கருப்பையா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் 58 கிராம கால்வாயில் நீரை திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்ததை அடுத்து விவசாயிகளின் போராட்டம் கைவிடப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment