தமிழகத்தில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!!

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தென் வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இந்த நிலையில்  காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைமாறி இன்னும் இரண்டு நாட்களில் புயலாக மாறும் என்றும் கணிக்கப்பட்டது.

இதன் விளைவாக தமிழகத்தில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இன்னும் அடுத்த சில நாட்களுக்கு கன மழை பெய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாத மக்கள் புயல் மூலமாக கூட மழை பெய்தால் நன்றாக இருக்கும் என்றும் எண்ணுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment