புயல் எச்சரிக்கை: பாரதிதாசன் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!!

கனமழையின் காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கினாலும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி இருப்பதால் புயலாக வலுப்பெற கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடல் சீற்றம்! 3 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றம்..!!

இந்த புயலுக்கு மாண்டஸ் என வானிலை மையம் பெயர் வைத்துள்ளது. இந்த சூழலில் புயலின் முன்னெச்சரிக்கை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைப்பெற உள்ள தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக பதிவாளர் கணேசன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதோடு இன்றைய தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இத்தகைய அறிவிப்பினால் மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.