தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ,தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை புயலாக உருவானது.
மோச்சா என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் நேற்று மாலை ஐந்து முப்பது மணியளவில் தீவிர புயலாக மாறி மணிக்கு ஆறு கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மோச்சா புயல் அந்தமான் தலைநகர் போர்ட் மேகரில் இருந்து 510 கிலோ மீட்டர் தொலைவிலும் வங்கதேசத்தில் இருந்து ஆயிரத்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வடகிழக்கு திசைகள் நகர்ந்து அடுத்த ஆறு மணி நேரத்தில் மத்திய வங்க கடல் பகுதிகளில் மிக தீவிர புயலாக வலுவடையும் என்றும் வருகின்ற 14ஆம் தேதி மதியம் தென்கிழக்கு வங்கதேசம் வடக்கு மியான்மர் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 முதல் 160 கிலோமீட்டர் வேகத்தில் காற்றும் வீசும் என்றும் புயல் கரையை தொடும்போது மணிக்கு 175 கிலோமீட்டர் வேகும் வரை காற்று வீசப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
இதை தொடர்ந்து புயல் சின்னம் காரணமாக சென்னை கடலூர் நாகை தூத்துக்குடி பாம்பன் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது
பகுதி நேர பிஇ, பிடெக் படிப்புகளுக்கு விண்ணப்பம்: அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு..!
இதனிடையே மேற்குவங்க மாநிலத்தின் உள்ள திகார் கடற்கரைக்கு உறைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கடற்கரைக்கு வர வேண்டாம் என்று சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்திஉள்ளார்.மேலும் அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்களை கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தினர்