சில தினங்களுக்கு முன்பாக மத்திய அரபிக்கடலில் புயல் ஒன்று உருவானது. முன்னதாக அவை காற்றழுத்தத் தாழ்வு நிலையாக இருந்து அதன் பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்றது. மேலும் இந்த புயலானது மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. மேலும் இவை மும்பை மாநகரத்தில் மிகவும் பாதிக்கும் தள்ளியது. மேலும் மும்பையில் பல பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும் அங்கு கடலானது மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டன. மேலும் மும்பையில் உள்ள சாலையோர மரம் ஒன்று வேரோடு சாய்ந்து கீழே விழுந்தது.
மும்பையில் மட்டுமின்றி கேரளாவிலும் இந்த புயல் பாதிப்பானது அதிகம் காணப்பட்டது. மேலும் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் இந்த புயலின் காரணமாக கனமழை பெய்து வந்த மழை நீரானது வீடுகளுக்குள் புகுந்தது. இந்த புயல் கடைசியில் குஜராத் மாநிலத்தில் காணப்பட்டது .அதன்படி குஜராத்தில் பல்வேறு மரங்கள் முறிந்து காணப்பட்டன. மேலும் பாரத பிரதமர் நரேந்திர மோடி குஜராத் ஆயிரம் கோடி நிவாரண நிதி ஒதுக்கி உள்ளார். எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தின புயலுக்கு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
ஆனால் இந்த புயல் பாதிப்பினை பெரிதென கண்டுகொள்ளாமல் போட்டோ ஷூட் நிகழ்த்தியுள்ளார் பிரபல நடிகை தீபிகா. மேலும் அவர் நடனமாடிய வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் புயலால் சாய்ந்த மரங்கள் மத்தியில் போட்டோ எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் புயலை நம்மால் தடுக்க முடியாது அது வந்து தான் போகும் எனவும் கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் கண்டனம் நிலவுகிறது.