எண்ணூர் டூ தூத்துக்குடி துறைமுகங்களில் எந்தெந்த புயல் கூண்டு ஏற்றம்?

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளன.

புயல் கூண்டு

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பல துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் தூரப் புயல் முன்னறிவிப்பு குறியீடாக ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஏனென்றால் சென்னையில் இருந்து 260 கிலோ மீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி கொண்டிருக்கிறது என்பதால் இத்தகைய புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.சென்னை எண்ணூர் துறைமுகத்தில்  மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால் நாகை, கடலூர், எண்ணூர் துறைமுக பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment