கடல் சீற்றம்! 3 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றம்..!!

வடகிழக்கு பருமழை தமிழகத்தில் தொடங்கியதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று மாலை புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாண்டஸ் புயல் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளது.

அதன் படி, 3 துறைமுகங்களில் 4, 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 3 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அதே போல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பாம்பன், தூத்துக்குடி போன்ற துறைமுகங்களிலும் புயல்கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.