
தமிழகம்
இன்றும், நாளையும் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம்..!!
கடந்த சில நாட்களாக திருப்பூர் நெசவாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு விதமான கோரிக்கை வைக்கப்பட்டது. ஏனென்றால் அங்கு நெசவு தொழிலுக்கு தேவையான நூல்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது.
இதுகுறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் அவர்கள் நூல்களின் விலை குறையும் வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இதை போன்று கோயம்புத்தூரிலும் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் ஜவுளி துறையினர் இரண்டு நாள் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு, கோவையில் இன்றும் நாளையும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. ஈரோடு கிளாத் மெர்ச்சண்டஸ் அசோசியேஷன் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்த கடையடைப்பு போராட்டத்தில் சுமார் 4000 கடைகள் வர்த்தக நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. நாமக்கல்லில் 30 ஆயிரம் விசைத்தறிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. கோபிசெட்டிபாளையம் பகுதியில் பனியன் உற்பத்தியாளர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
மேலும் நம்பியூர், கெடாரை, எம்மாம்பூண்டி, அரசூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த உள்ளாடை உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டங்களை அறிவித்துள்ளனர். உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தத்தில் 10 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் 12 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்றும் தெரிகிறது.
