ரஷ்யா-உக்ரைன் போரை எப்படியாச்சும் நிறுத்துங்க.. வேண்டுகோள் விடுத்த 3 வயது சிறுமி!

ரஷ்யா- உக்ரைன் இடையேயான போரானது உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு விஷயமாக உள்ளது. ரஷ்யா உக்ரைனை கடந்த சில நாட்களாக வான் வழி, தரை வழி மற்றும் நீர் வழி என மூன்று வழிகளிலும் போரைத் துவக்கி கடுமையாகத் தாக்கி வருகின்றது.

உக்ரைன்- ரஷ்யா போர் நிறுத்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதே உலக மக்களின் பிரார்த்தனையாக உள்ளது.

உக்ரைனில் வாழும் இந்தியர்கள் பலரும் தங்களைக் காப்பாற்றக் கோரி அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு நமது மனதை உலுக்குகின்றனர்.

இந்தநிலையில் ரஷ்யா- உக்ரைன் போரை நிறுத்த உலக நாடுகளின் தலைவர்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் 3 வயது சிறுமி ரஷ்யா- உக்ரைன் போரை நிறுத்தக் கோரி வேண்டுகோள் விடுத்துள்ள வீடியோ ஒன்று வெளியாகி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்தச் சிறுமி பூமியில் அமைதி வேண்டும்; பிளவுகள் வேண்டாம். நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள். போரை நிறுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.