Connect with us

தமிழக அரசே!! நுழைவுத்தேர்வை உடனடியாக தடுத்து நிறுத்துக-ஓபிஎஸ் அறிக்கை!

ops

Tamil Nadu

தமிழக அரசே!! நுழைவுத்தேர்வை உடனடியாக தடுத்து நிறுத்துக-ஓபிஎஸ் அறிக்கை!

தமிழக அரசே!! நுழைவுத்தேர்வை உடனடியாக தடுத்து நிறுத்துக-ஓபிஎஸ் அறிக்கை!

தற்போது நம் இந்தியாவில் அனைத்து விதமான கல்லூரி பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படுகிறது. அதுவும் குறிப்பாக நம் தமிழகமே பல ஆண்டுகளாக நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக போராடிக் கொண்டு வருகிறது.

இவ்வாறு உள்ள நிலையில் சில வாரங்களுக்கு முன்பு மத்திய பல்கலைகழகம் சில முக்கிய அறிவிப்புகளை கூறியிருந்தது. அதன்படி மத்திய பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை அமையும் என்றும் கூறியிருந்தது.

பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை இருக்காது என்றும் அறிவித்திருந்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நுழைவுத்தேர்வை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி மத்திய பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட உள்ள பொது நுழைவுத் தேர்வை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார் .அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top