Connect with us

அதிகார வரம்பை மீறி செயல்படுவதை நிறுத்துக.! உங்கள் இஷ்டத்துக்கு செயல்பட அரசமைப்பு சட்டம் அனுமதிக்காது;

ஆர் என் ரவி

செய்திகள்

அதிகார வரம்பை மீறி செயல்படுவதை நிறுத்துக.! உங்கள் இஷ்டத்துக்கு செயல்பட அரசமைப்பு சட்டம் அனுமதிக்காது;

அதிகார வரம்பை மீறி செயல்படுவதை நிறுத்துக.! உங்கள் இஷ்டத்துக்கு செயல்பட அரசமைப்பு சட்டம் அனுமதிக்காது;

நம் தமிழகத்தில் தொடர்ந்து ஆளுநருக்கு எதிரான கண்டனங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதுவும் குறிப்பாக மயிலாடுதுறையில் ஆளுநர் பங்கேற்க இருந்த விழா ஒன்றில் அவர் வாகனம் தாக்கப்பட்டதாக செய்திகள் பரவியது.

அதோடு மட்டுமில்லாமல் அவர் சென்ற இடமெல்லாம் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில்  ஈடுபட்டனர். இந்த நிலையில் ஆளுநர் அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதனால் அதிகார வரம்பை மீறி செயல்படுவதை ஆளுநர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஆளுநர் மாளிகை அளித்திருக்கும் மாநாட்டை துணைவேந்தர், பேராசிரியர், இணைப் பேராசிரியர்கள் புறக்கணிக்கவும் தேசிய கல்விக் கொள்கை குறித்த பயிலரங்கம் நடத்த அறிவுறுத்தும் சுற்றறிக்கையை மானியக்குழு திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆளுநர் தன் சொந்த விருப்பத்தை மாநில மக்கள் மீது திணிக்க முடியாது என்றும் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல் தன் சொந்த விருப்பத்தை நடைமுறைப்படுத்த ஆளுநர் முயற்சி செய்து கொண்டு வருகிறார் என்றும் கூறினார். ஆளுநர் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் செயல்பட இந்திய அரசமைப்பு சட்டம் அனுமதிக்கவில்லை என்றார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top