Connect with us

தமிழகத்தில் திருடப்பட்ட 3 சிலைகள்: அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!!

statues

தமிழகம்

தமிழகத்தில் திருடப்பட்ட 3 சிலைகள்: அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!!

கடந்த சில நாட்களாக நம் தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அமேரிக்காவில் 3 உலோக சிலைகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மன்னார்குடி வேணுகோபாலசுவாமி கோயிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 3 உலோக சிலைகள் திருடு போனதாக புகார் எழுந்தது. குறிப்பாக விஷ்ணு, ஸ்ரீதேவி,பூதேவி உள்ளிட்ட சிலைகள் 50 ஆண்டுகளுக்கு முன் திருடு போனதாக கூறப்படுகிறது.

இதனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினர். இந்த சூழலில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் திருடுபோன சிலைகள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்கா அருங்காட்சியத்தில் உள்ள சிலைகளை மீட்டுக் கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top